பெண் தீ வைத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்

ஜமுனா ராணிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்தும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு

Dec 26, 2023 - 13:03
Dec 26, 2023 - 14:26
பெண் தீ வைத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்

முன்விரோதம் காரணமாக அகல்விளக்கை வீசி பெண்மணியை தீ வைத்து கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வடபழனியை சேர்ந்த கிருஷ்ணவேணி தனக்கு சொந்தமான வீட்டில் தன் மகள் ராணியுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் மற்றொரு பகுதியை ஜமுனா ராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அவரது செயல்பாடுகல் சரியில்லாத்ததால், வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளனர்.

வீட்டை காலி செய்த ஜமுனா ராணி, சில மாதங்களுக்கு பிறகு தனக்கு கிருஷ்ணவேணியும், ராணியும் 85 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமெனவும், தராமல் ஏமாற்றுவதாகவும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த் 2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கோடம்பாக்கம் வன்னியர் தெருவில் உள்ள பால விநாயகர் கோவில் அருகே தன் மகளுடன் கிருஷ்ணவேனி பூ கட்டிக்கொண்டிருந்தார்.அப்போது, அகல் விளக்குடன் கோவிலுக்கு வந்த ஜமுனாராணி, அதை கிருஷ்ணவேணி மீது வீசியதில் அவரது உடைகளில் தீப்பற்றி, பலத்த தீக்காயங்களுடகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மறுநாள் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் ஜமுனா ராணிக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வு, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக மகள் ராணியும், கோவில் அர்ச்சகரும் உள்ளதாகவும், மகள் என்பதற்காக அவரது சாட்சியத்தை புறந்தள்ளிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக நடந்த தாக்குதல் என்பதை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததை ஏற்றுக்கொண்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அந்த தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை என கூறி, ஜமுனா ராணிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்தும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow