11 நாள் இழுபறிக்கு முற்றுப்புள்ளி: கேரளம் புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு 

புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் கேரள காங்கிரசு திணறி வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு வி.டி,சதீசன் புதிய முதல்வராக காங்கிரசு தலைமை அறிவித்துள்ளது. 

11 நாள் இழுபறிக்கு முற்றுப்புள்ளி: கேரளம் புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு 
கேரளம் புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு 

கடந்த 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து யார் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சதீசனை முதலமைச்சராக்க வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. 

11 நாட்களாக முதல்வரை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நீடித்தது. முதல்வர் வேட்பாளர் ரேஸிஸ் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சதீசன் ஆகியோர் இருந்தனர். இந்த மூவர் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் சதீசனுக்கு கூட்டணி கட்சியான ஐயூஎம்எல்-ம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் கே.சி.வேணுகோபாலை முதலமைச்சராக்கிவிட்டு, சதீசனுக்கு முக்கிய அமைச்சரவையை வழங்க காங்கிரஸ் தலைமை யோசித்து வந்ததது. 

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரமேஷ் சென்னிதலாவும் இருக்கும் நிலையில் அவருக்கு சபாநாயகர் பதவியைக் கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியைத் தவிர வேறு எந்தப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை என சதீசன் உறுதி இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கேரளம் மாநில முதல்வராக சதீசன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow