வார தொடக்கத்தில் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி: சவரனுக்கு ரூ1,360 உயர்வு
வார தொடக்க நாளான இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.4,000 அதிகரித்து, ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.4 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வார தொடக்க நாளான இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வு முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,600 உயர்ந்து விற்பனை ஆகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, கிராம் வெள்ளி ரூ.318-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிலோவிற்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை உயர்வு நகைப்பிரியர்களுக்கு கவலை அளித்து வருகிறது.
What's Your Reaction?

