வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு.. மே-1க்குள் சரி செய்யலைன்னா அவ்ளோதான் ! என்னவா இருக்கும்...

பிரச்னையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Apr 27, 2024 - 21:57
வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு.. மே-1க்குள் சரி செய்யலைன்னா அவ்ளோதான் ! என்னவா இருக்கும்...

அரசு வாகனங்களை தவிர பிற வாகனங்களில் உள்ள எண் தகட்டிலும், வாகனங்களின் பிற பகுதிகளிலும், ஸ்டிக்கர்கள், சின்னங்கள் போன்ற அடையாளங்களை இனி ஒட்டக்கூடாது என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

பெரும்பாலும், சென்னை மாநகரில் உள்ள வாகனங்களின் எண் தகட்டில், பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வாகனங்களின் வேறு பகுதியிலும் ஒட்டப்படுகிறது. 

இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள், எழுத்துக்களை தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்வதாக கருதப்படுகிறது. 

இதேவேளையில், குற்றச் செயல்களில்  ஈடுபடுபவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதை போலீசார் அவ்வப்போது கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய மே 1ஆம் தேதி வரை கால-அவகாசம் வழங்கியுள்ளது. 

அதற்கு மேலும் அடையாளங்களை நீக்கவில்லை என்றால், சட்டம் 1988-ன் கீழ் அபராதம் விதிக்கப்படு என்று போக்குவரத்து காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow