கள்ளக்காதலை கண்டித்த கணவரைக் கொலை செய்த மனைவி

கணவனை மனைவி கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dec 30, 2023 - 14:41
Dec 30, 2023 - 18:23
கள்ளக்காதலை கண்டித்த கணவரைக் கொலை செய்த மனைவி

மானாமதுரை அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலி படையை வைத்து கொலை செய்துவிட்டு, காணவில்லை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள  மூங்கிலூரணியில் சதுரகிரி-ராதிகா தம்பதியினர் வசித்து வந்தனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதுரகிரி வெளியூர் சென்றுள்ளதாக ராதிகா அனைவரிடம் தெரிவித்துள்ளார். ராதிகாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த சதுரகிரியின் தந்தை மலைச்சாமி மானாமதுரை காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது மகனைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.   

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதுரகிரியின் மகன் துரைசிங்கத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் தனது தந்தையை தனது தாய் கூலிப்படையினரை வைத்து  கொலை செய்து, புதூர் செல்லும் சாலை பகுதியில் உள்ள  காட்டுப்பகுதியில் புதைத்ததாக கூறியதாக சொல்லப்படுகிறது. 

அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், மருத்துவத்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் முன்பாக புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது சில தடயங்கள் கிடைத்துள்ளது. அந்த தடயங்களை வைத்து காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலிப்படை வைத்து கொலை மனைவி செய்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக ஐந்து பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவி கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow