செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு..!

Feb 8, 2024 - 16:40
செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு..!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில்  அமலாக்கத்துறை நடத்திவந்த சோதனை நிறைவடைந்தது. 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த இராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை 7  மணிக்கு மேல் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து, சுமார் 8 மணி நேரமாக நடைபெற்று வந்தது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில்,  இன்று கரூர் ராமேஸ்வரபட்டி பகுதியில் உள்ள அமைச்சர் வீட்டில் ஐந்து அதிகாரிகள் திடீர்  சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் இடையே வெளியே சென்ற அதிகாரி ஒருவர், மேலும் ஒரு அதிகாரியை அழைத்து வந்தார். 

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது  கணினியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனையிட்டு ஆய்வு செய்ய அந்த அதிகாரி அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் பெற்றோர்கள் மட்டும் இருந்த நிலையில் பெற்றோர்களிடம் விசாரணையைத் தொடர்ந்து சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. 

இதையும் படிக்க  |  அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு-ஆவணங்கள் இருப்பதாக நீதிபதி தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow