Coolie Movie: தடம் மாறும் ரஜினி? ’கூலி’ படத்திற்கு 'A' சர்டிஃபிகேட் ஏன்?
ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு மத்திய தணிக்கை குழுவினால் ‘ஏ’ சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அதுக்குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

ரஜினி இதற்கு முன் அவர் நடித்த படங்களில் 20 படங்கள் 'ஏ' சர்டிஃபிகேட்டுடன் வந்தன. அதில் முதல் நான்கு படங்களான 'புவனா ஒரு கேள்விக்குறி', 'காயத்ரி', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அவள் அப்படித்தான்' போன்றவை வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதால் 'ஏ' சர்டிஃபிகேட்டுடன் வந்தன.
அந்தக் கதைகளின் : நாயகனாக ரஜினியும் விரும்பி நடித்திருந்தார். அப்படி அவர் கதைக்காக கடைசியாக நடித்த 'ஏ' சர்டிஃபிகேட் படம், மகேந்திரனின் 'கை கொடுக்கும் கை'.
ரஜினி மாஸ் மசாலா ஹீரோவாக ஆன பின் காட்சிகளுக்காக 'ஏ' சர்டிஃபிகேட் பெற்ற படங்கள் வரத்தொடங்கின. அதில் முதலாவது படம் 'காளி'. அப்புறம் 'நெற்றிக்கண்', 'ரங்கா', 'புதுக்கவிதை, : 'மூன்று முகம்', 'பாயும் புலி', 'சிவப்பு சூரியன்', 'நான் மகான் அல்ல', 'நான் சிகப்பு மனிதன்', 'உன் கண்ணில் நீர்வழிந்தால்', 'விடுதலை', 'ஊர்காவலன்', 'கொடிபறக்குது' கடைசியாக 'சிவா'. அது வெளியான 36 ஆண்டுகளுக்கு பின் இப்போது 'கூலி' 'ஏ' சர்டிஃபிகேட்டுடன் வந்திருக்கிறது. நிச்சயம் இந்தச் சான்றிதழ் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளுக்காக மட்டுமே தரப்பட்டிருக்கும்.
ரஜினியின் பாதையினை மாற்றிய பஞ்சு அருணாசலம்:
பொதுவாகவே கமல் படங்கள் என்றால், முத்தக் காட்சிகள் உட்பட ஆபாசக் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால், ரஜினி படத்தில் அப்படி இருக்காது என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் எண்ணம். அதனாலேயே ரஜினி படத்துக்கு அவர்கள் அதிகமாக வருவார்கள். கமல் படங்களைவிட ரஜினி படங்களுக்கு ஓபனிங் அதிகமாக இருந்ததற்கு அதுவே முக்கியக் காரணம். இந்த நுட்பத்தை ரஜினிக்கு முதன் முதலில் புரியவைத்தது கதாசிரியர், பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம்.
கமல், ரஜினி இருவரும் பாலசந்தர் பட்டறையில் உருவானாலும், பயணத்தின் பாதியில் பாலசந்தர் பாணியைக் கைவிட்டு, பஞ்சு அருணாசலம் ரூட்டுக்கு மாறியதாலேயே ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினி ஆனார். கடைசிவரை வசூல் சக்ரவர்த்தியாகவே இருந்தார். முறியடிக்க, ரஜினிக்கு சின்ன ஆனால், கமலின் 'விக்ரம்' படம் ரஜினியின் முந்தைய பட வசூலை ஜெர்க். அந்தத் தடுமாற்றத்தின் விளைவு, 36 வருடம் கட்டிக்காத்த கௌரவத்தை ரஜினி காசுக்காக தாரை வார்த்திருக்கிறார்.
'எல்லாம் தயாரிப்பாளர்களின் நன்மைக்காக' என்று ரஜினி நியாய, தர்மம் பேசினாலும், தன் சூப்பர் ஸ்டார் இமேஜின் மீது முன்பு அவருக்கிருந்த நம்பிக்கை இப்போது இல்லை என்பதே உண்மை. அதை சரி பண்ண அவர் செய்த சமரசங்களின் விளைவுதான் ரஜினியை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஆபாசமும், அதீத வன்முறையும்தான் தன் படங்களைக் காப்பாற்றும் என்று ரஜினியே நம்பினால், அவர் சூப்பர் ஸ்டார் என்பது இனியும் பொருந்துமா?
பழைய இயக்குநர்கள் குறைந்தபட்ச சமூக அக்கறையுடன் கதைகளை உருவாக்கி, ரஜினியை படிப்படியாக உயர்த்தி சூப்பர் ஸ்டார் இருக்கையில் உட்கார வைத்தனர். ஆனால், இன்றைய இளம் இயக்குநர்கள், ஹாலிவுட் தரத்திற்குப் படம் எடுக்கிறேன் என்று ரஜினியைக் கூலிக்கு மாரடிக்கும் 'கூலி'யாகவே மாற்றி அவர் இமேஜை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டனர். இவர்களின் படத்தில், இப்படிப்பட்ட கதைகளில் இனியும் நடிக்க வேண்டுமா என்று ரஜினிதான் சிந்திக்க வேண்டும்!
எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில் அடிதடி, ஆபாச நடனம், உடை, காட்சிகள் எல்லாம் எம்.ஜி.ஆர். படங்களில்தான் அதிகம் இருக்கும். ஆனால், சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர். சமத்துவம், சமூக நீதி, அறம், அன்பு எல்லாம் பேசி அதை சமன் செய்வார்.
படம் முழுக்க ஹீரோயின் ஆபாசமான உடைகளை அணிந்து வரும் வக்கிரத்தை விதைத்துவிட்டு, 'பெண்கள் இப்படி எல்லாம் இருக்கலாமா?' என்று வசனம் பேசுவார். 'இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள'ன்னு பாட்டும் பாடி தன்னை கலாசாரக் காவலனாக உறுதிப்படுத்திக் கொள்வார். இந்தப் புரிதலும், புத்திசாலித்தனமும்கூட மேடைக்கு மேடை தத்துவம் பேசும் ரஜினிக்கு இல்லாமல் போனதுதான் பரிதாபம்.
(கட்டுரையாளர்: இளையரவி/ குமுதம் / 13.08.2025)
What's Your Reaction?






