ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

210 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. குறிப்பாக இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவரது சிறப்பான பந்துவீச்சால் நெதர்லாந்து அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, உலகக்கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பேட்டிங்கில் அதிரடியும், பந்துவீச்சில் துல்லியமும் காட்டிய இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் தொடரின் அடுத்த கட்டத்திற்கான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,நெதர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியின் போது, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 பவுண்டரிகளை கடந்தவர் என்ற அசாத்திய சாதனையை இந்திய அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்து அசத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow