அறநிலையத்துறை சார்பில் 4  ஜோடிகளுக்கு திருமணம் !

ஒரே நாளில் 11 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

Nov 24, 2023 - 13:10
Nov 24, 2023 - 15:44
அறநிலையத்துறை சார்பில் 4  ஜோடிகளுக்கு திருமணம் !

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 வகையான சீர்வரிசை பொருட்களுடன்  4ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திருக்கோவில்கள் சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க உத்திரவிட்டுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு  குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட தகுதியான 4 மணமக்கள் 
ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இன்று பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி உள்ளிட்டவைகள் வழங்கி பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் தியாகராஜன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி ஆகியோர் முன்னிலையில் 
திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் திருமணம் செய்து கொண்ட 4 ஜோடிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு, திருமண சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

திருமண விழாவில் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, திருக்கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முத்துலட்சுமி,சுரேஷ்,அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி, செயல் ஆய்வாளர்கள் பிர்த்திக்கா, திலகவதி உள்ளிட்டோரும் மணமகன், மணமகள் வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 11 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது.மொத்தம் இதுவரை 29 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow