ஆபத்தில் LIC பணம்..? அச்சத்தில் முதலீட்டாளர்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எல்.ஐ.சி (LIC - Life Insurance Corporation of India) என்பது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசால் 1956-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, முழுமையாக மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது காப்பீடு மற்றும் முதலீடு சார்ந்த பல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. மறுபக்கம் பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறது எல்.ஐ.சி. அதன்படி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் 10.80% பங்குகளை எல் ஐ சி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் (REL) நிதி முறைகேடுகள், நிதிப் பரிமாற்ற முறைகேடுகள் மற்றும் ஒத்துழையாமை ஆகியவை அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்காரணமாக, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (REL) மற்றும் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் மேத்தாவுக்கு எதிராக செபி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டும், REL நிறுவனம் சுமார் ரூ. 15.15 லட்சம் கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வருவாயைத் தவறாகக் காட்டியுள்ளதாகவும், இது மொத்த ஒருங்கிணைந்த வருவாயில் 99.80 சதவீதமாகும் என்றும் செபி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தங்கள் பங்குகளைக் குறைத்துள்ளதால், அதன்காரணமாக FII உரிமை 14.26% ஆகக் குறைந்துள்ளது.
What's Your Reaction?