சடலமாக கிடந்த மருமகள்… மமதா வீட்டில் அதிர்ச்சி… நடந்தது என்ன?
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் உறவினர் மகள் பிரிஷ்டி முகர்ஜி, பிர்பூம் மாவட்டம் ராம்புர்ஹாட்டில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதான பிரிஷ்டி முகர்ஜி, மமதா பானர்ஜியின் உறவினரின் மகள் என கூறப்படுகிறது. அவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ராம்புர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த அறையில் பிரிஷ்டி முகர்ஜி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்திலும் பிரிஷ்டி முகர்ஜியின் பெயர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. முறைகேடான முறையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியைப் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அவரது பணி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே அவரது மரணம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?