பெனால்டியில் மொராக்கோவின் மிரட்டல் வெற்றி! நெதர்லாந்து வெளியேற்றம்!
உலகக் கோப்பை கால்பந்து தொடர் போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் 48 அணிகள் பங்கேற்று இத்தொடரின் முதல் சுற்றின் முடிவில் 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின.
இந்த சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும். இன்றைய ரவுண்ட் ஆப் 32 சுற்றின் முதல் பாதியில் மொராக்கோ மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தது.
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 90 நிமிடங்களில் முடிந்து பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
இந்த கூடுதல் நேரத்தில், சரியாக ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தின் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.ஆனால் இதில் மொராக்கோ மற்றும் நெதர்லாந்து அணிகள் கோல் அடிக்காத்தால் 1-1 என்ற சமநிலையே தொடர்ந்தது.
இதனால் ஆட்டம், பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. பரபரப்பாக நடந்த பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றி பெற்றது.மொராக்கோவின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் இஸ்மாயில் சைபாரி இறுதிப் பந்தை மிகத் துல்லியமாகக் கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் மொராக்கோ நுழைந்து நெதர்லாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.
What's Your Reaction?