சமையல்காரர் புகாரில் சிக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் ஷஷாங் சிங் மீது வீட்டில் பணியாற்றிய சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபாலைச் சேர்ந்த விபேந்திர சிங் தோமர் என்பவர், ஷஷாங் சிங்கின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றியதாகக் கூறி, தன்னை தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, விருப்பத்திற்கு மாறாக வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, ரதிபாத் காவல் நிலைய போலீஸார் ஷஷாங் சிங் மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஷஷாங் சிங், புகார்தாரர் மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கியிருந்ததாகவும், பணியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில்தான் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ள போலீஸார், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் ஷஷாங் சிங் மற்றும் அவரது தந்தை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் ஆகியோர் மீது வீட்டில் பணியாற்றிய சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?