“வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்” - செல்வப்பெருந்தகை
எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர் ரஜினிகாந்த் என செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப்பதிவு
நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை அனைத்தும் முடிந்துள்ளதாகவும், ஐசியூ வார்டில் இருந்து இன்று மாலை ஜெனரல் வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நல பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நல பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர்.ரஜினிகாந்த் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்”என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?