மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் - குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்ததால் சிக்கல்

அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்துள்ளவர். குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டியுள்ளார்.

Oct 21, 2024 - 13:33
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் - குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்ததால் சிக்கல்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட விவகாரத்தால் மீண்டும் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் உணவு சார்ந்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தனது வீட்டில் நடக்கும் விஷேசங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்பான் சென்ற கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தான் காரை இயக்கவில்லை என்றும் தனது ஓட்டுநரே காரை ஓட்டியதாக இர்பான் தரப்பில் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் இர்பானிடம் முறையாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்த தகவலை வீடியோவாக வெளியிட்டார். இது இந்திய மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுவாக எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், குழந்தையின் பிறப்பு மற்றும் குழந்தையின் தொப்பு கொடியை வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இர்பான் மற்றும் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கவும், மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஊரக நலப் பணிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கம் கேட்டிருந்த நிலையில், மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை மன்னிப்பு வீடியோ கூட வெளியிடவில்லை இர்பான். இந்நிலையில் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதில் அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்துள்ளவர். குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ள நிலையில் தொப்புள் கொடியை வெட்டியது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் படி தவறாகும். அதேபோன்று அறுவை சிகிச்சை அரங்கிலும் வீடியோ எடுத்தது தனி நபர் உரிமையை மீறும் செயல் என்றும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட உபகரணங்கள் முறையான மருத்துவ முறையில் சுத்தம் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow