ஆறுதல் அளிக்கும் செய்தி: சற்றே குறைந்த தங்கம்,வெள்ளி விலை, சவரனுக்கு ரூ.1,720 குறைவு 

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக விலை குறைந்துள்ளது. 

ஆறுதல் அளிக்கும் செய்தி: சற்றே குறைந்த தங்கம்,வெள்ளி விலை, சவரனுக்கு ரூ.1,720 குறைவு 
சற்றே குறைந்த தங்கம்,வெள்ளி விலை

நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.515-ம், சவரனுக்கு ரூ.4,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 80-ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்த, வெள்ளி விலையும் மறுபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் விண்ணை முட்டும் அளவுக்கு எகிறுகிறது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow