கடலில் தவறி விழுந்த நாகை மீனவரை விசைப் படகுகள் மூலம் தேடும் பணி தீவிரம்

அக்கரைப்பேட்டையில் இருந்தும் விசைபடகுகள் மூலம் சக மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Jan 4, 2024 - 12:56
Jan 4, 2024 - 14:03
கடலில் தவறி விழுந்த நாகை மீனவரை விசைப் படகுகள் மூலம் தேடும் பணி தீவிரம்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது விசை படகில் இருந்து கடலில் தவறி விழுந்த நாகை மீனவரை விசை படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில் கடந்த 2ம் தேதி சந்திரன், ஜீவா, மணி, சரத்குமார், ரமேஷ், லட்சுமணன், சக்திவேல் ஆகிய 7 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரை கடற்பகுதியில்  6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  சாமந்தான்பேட்டை சேர்ந்த சரத்குமார் ( வயது 30) என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து விட்டார். 

உடனடியாக சக மீனவர்கள் சரத்குமாரை கடலில் குதித்து தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் சரத்குமார் மாயமானார். உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடலில் மீன்பிடிக்கச்சென்று இருக்கும் மீனவர்களிடம் தொலைபேசி மூலம் கடலில் தவறிவிழுந்த மீனவரை பார்த்தால் உடனே தகவல் அளிக்க வேண்டும் என அறிவிப்பு செய்துள்ளனர். 

மேலும் அக்கரைப்பேட்டையில் இருந்தும் விசைபடகுகள் மூலம் சக மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாயமான மீனவர் சரத்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமாகி உள்ள சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow