நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: 4 பேர் கைது-போலீஸ் விசாரணை

உறுப்பினர்கள் மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு

Dec 13, 2023 - 14:30
Dec 13, 2023 - 19:49
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்: 4 பேர் கைது-போலீஸ் விசாரணை

நாடாளுமன்றத்தில் அவை வளாகத்தில் அத்துமீறிய 2 இளைஞர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரம் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத  நேரத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர் எம்.பிக்களின் இருக்கைகளின் மீது தாவி குதித்து இருக்கைகள் விட்டு இருக்கைகளுக்கு தாவி குவித்தார். இதனை கண்ட  எம்.பிக்கள் இளைஞரை பிடிக்க முற்பட்டனர். இளைஞர் தங்கள் கையில் வைத்திருந்த புகையுடன் கூடிய பொருளுடன் சர்வதிகாரம் கூடாது என்று கோஷமிட்டனர்.

இதனால் நாடாளுமன்ற அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இளைஞர்கள் இருவரையும் எம்.பிக்கள் மடக்கி பிடித்தனர். இதேபோல் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பிய நீலம், அன்மோல் ஷிண்டே என்ற இரு பெண்களை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் 22ம் ஆண்டு நினைவு தினத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளையும் மூடி டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்கள் மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.நாடாளுமன்றத்துல் இருவர் அத்துமீறிய நேரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow