டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு? ரசிகர்கள் ஏமாற்றம் 

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வங்கதேச அணி விளையாட நிலையில், பாகிஸ்தான் அணியும் விலக முடிவு செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு? ரசிகர்கள் ஏமாற்றம் 
பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு? ரசிகர்கள் ஏமாற்றம் 

இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளன. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாக வங்கதேச அணி வீரர் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்பு செய்ய தடைவிதித்தது. அதுமட்டுமின்றி,  இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்றுப்படி வங்கதேச அணி ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்கதேச அணி கோரிக்கை ஐசிசி ஏற்கவில்லை. 

இதனால் காரணமாக இந்திய வந்து டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி  அறிவித்தது. இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பை போட்டிகளில் சேர்கக்ப்பட்டது.  ந்தச் சூழலில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தங்கள் நாட்டின் அரசே முடிவு செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி அண்மையில் தெரிவித்தார். 

இதனால் பாகிஸ்​தானுக்கு ஐசிசி கடும் எச்​சரிக்கையை அனுப்​பி​யிருந்​தது. இவ்​வாறு செய்​தால் கிரிக்​கெட் உலகி​லிருந்து பாகிஸ்​தான் முழுமை​யாக தனிமைப்​படுத்​தப்​படும் என்​றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்​தது.  இந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை திங்கட்கிழமை அன்று இஸ்லாமாபாத் நகரில் மோசின் நக்வி சந்தித்தார். அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மோசின் நக்வி பதிவிட்டார்.

 “ஐசிசி விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்து, விரிவாக விளக்கினேன். அனைத்து ஆப்ஷன்களையும் கருத்தில் வைத்து இதில் இறுதி முடிவு எடுப்போம் என என்னிடம் தெரிவித்தார். வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அன்று இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என அதில் அவர் தெரிவித்தார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானும் புறக்கணிக்க முடிவு செய்திப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow