"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Jul 30, 2026 - 20:13
"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

சென்னை தியாகராய நகரில்  2026-2027 ஆம் ஆண்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ஆதிதிராவிடர் மக்களுக்கு இதற்கு முன்னாள் இருந்த திமுக அரசு துரோகம் இழைத்தாகவும் ஆதிதிராவிடர் துறைக்கு ஒதுக்கவேண்டிய நிதியை வேற துறைக்கு ஒதுக்கியதாகவும் குற்றச்சாட்டினார்.

தற்போது புதிய அரசு ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக  ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜயை வலியுறுத்தினார். மேலும் நிழல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரை நேரில் சந்தித்து கொடுக்க முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அரசு நிகழ்ச்சிகளில் முதலில்  பாடவேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் மூன்றாவதாக பாடப்பட்டது கடும் கண்டத்திற்குரியது. அதனைத் தொடர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால் தமிழக காங்கிரஸ் கட்சிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்று தரவில்லை என்றால்  தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர் இரண்டு பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்துவந்தது தற்போது நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதத்திற்கு போட்டியிட சீட்டு வழங்காவிடினும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெற்றது. இத்தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தி 4 இடங்களை கோரியநிலையில், அதிமுக 1 சீட்டு மட்டுமே வழங்கியது. அந்த ஒரு இடத்திலும் தோல்வியைத் தழுவியது.இதனால் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் இப்போதைக்கு எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த கூட்டணியிலும் இல்லை என்றாலும் அதிமுகவிலிருந்து விலகி பலரும் தவெகவில் இணைந்து வரும் நிலையில் இக்கட்சியும் பனையூரை நோக்கி பயணம் எடுக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow