வயநாடு மண் சரிவு... இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்கள்; மீட்புப் பணி தீவிரம்
கேரளாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கேரளா வயநாடு மேப்பாடி அருகே கல்லடியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மண்ணிற்கு அடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்புகுழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வயநாடு பகுதியில் அதிகரித்துள்ளதால் இந்த மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. வயநாடு மேப்பாடி அருகே சூரல்மலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மண் சரிவில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதுடன் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தற்போது மீண்டும் மண் சரிந்து விபத்து ஏற்பட்டு இருப்பது வயநாடு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?