நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி : தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.320 குறைவு 

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தியாக அமைந்துள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி : தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.320 குறைவு 
Good news for jewelers

சென்னையில் இன்று (டிச.,04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,02) ஆபரண தங்கம் கிராம், 12,040 ரூபாய்க்கும், சவரன், 96,490 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (டிச.,03) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் அதிகரித்து, 12,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 96,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (டிச.,04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 சரிந்து ஒரு கிராம் ரூ.12,020க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையும் என நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow