இமாசலப்பிரதேசம் - பாஜகவுக்கு வாக்களித்த காங். எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்..

இமாசலப்பிரதேசம் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.

இமாசலப்பிரதேசம் - பாஜகவுக்கு வாக்களித்த காங். எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்..

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. அப்போது இமாசலப்பிரதேசத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர், பாஜக ஆளும் ஹரியானாவில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்து வாக்கெடுப்புக்குச் சென்றனர். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அதனை வரவேற்று எழுந்துநின்று பாஜகவினர் கைதட்டி வரவேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிதி மசோதாவுக்கு ஆதரவளிக்க தவறி, கட்சி முடிவுகளை மீறியதாக 6 பேரையும் சபாநாயகர் குல்தீப் சிங் தகுதிநீக்கம் செய்துள்ளார். அதன்படி ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார், ரவி தாகூர், சேத்தன்யா சர்மா ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, முன்னதாக பாஜக எம்.எல்.ஏக்கள் 15 பேரையும் அவர் தகுதிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow