சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிட நான்கு தொகுதிகளில் ஆய்வு ?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிட 4 தொகுதிகளில் சர்வே எடுக்கும் பணிகளில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் . முதன் முதலாக 20926 சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜய், முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களமிறங்க போகிறார் என அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்ப்பு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கான வியூக வகுப்பாளர் ஒருவர் எடுத்த சர்வே மூலம் விஜய் போட்டியிட 4 தொகுதிகளைஅடையாளம் காணப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் தான் சாதகமாக இருக்கும் என தவெக நினைக்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இதேபோல், மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூவும், திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.எம்.கருமாணிக்கமும் எம்.எல்.ஏ.வாக உள்ளனர். நாகப்பட்டினம் தொகுதியில் விசிக எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் இருக்கிறார்.
இந்த 4 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, நாகப்பட்டினம் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் உள்ளது. அதனால் இந்த இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என தீவிரமாக சர்வே எடுத்து வருகின்றனர்.
What's Your Reaction?

