தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்கு... போலீசார் தீவிர விசாரணை!
நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரான தா.மோ.அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் கடந்த 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தன்னுடைய சொத்தை திமுகவின் முன்னாள் அமைச்சரான தா.மோ.அன்பரசன் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது பரங்கிமலையில் தேர்தல் பணிமனைக்காக கொடுத்த 5,500 சதுர அடி நிலத்தை திமுகவின் முன்னாள் அமைச்சரான தா.மோ.அன்பரசன் திருப்பி தரமறுக்கின்றார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்கவும் அந்த இடம் தரப்பட்டது. இதற்காக 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால் 6 மாதம் முடிந்த பின்னரும் இடத்தை காலி செய்யாமலும் வாடகை பணமும் தராமலும் இருக்கின்றனர்.
குத்தகை ஒப்பந்தம் சிலரின் பெயரில் ஏற்படுத்தினர். அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்களின் முகவரி போலி என்று தெரியவந்துள்ளது.இந்நிலையில் கடந்த ஜுன் 19 ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார். அப்போது ஒரு வார காலத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும் பணம் கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்திருந்தார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பிமில்லை எனக்கு அந்த நிலம் வேண்டும் என்று உறுதியாக நான் கூறியிருந்தேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர் அதன் பின்பு பேசவில்லை.
பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை.தற்போது என்னுடைய நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில்,ராஜேஷ் சோமசுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில் பரங்கிமலை போலீசார் நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுகவின் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவரது உதவியாளர் ஜெய்சங்கர் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?

