இரவோடு இரவாக சாம்சங் ஊழியர்களை கைது செய்த போலீஸ்
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்த போலீசார்.
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்த போலீசார்.
தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்காசத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படாமல் இருந்தது. இதையடுத்து போராட்டத்திற்கு விரைந்து தீர்வு காணுமாறு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ராஜேஷ் முன்னிலையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சாம்சங் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 3 அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
இதையடுத்து பேட்டியளித்த சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன், பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை எனவும் தங்களது கோரிக்கை தொடர்பாக சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர்கள் தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் படிக்க: இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கும் முறை? அறிவியல் உலகில் இருக்கும் ஆச்சரியம்.. இது சாத்தியமா?
இந்நிலையில், சாம்சங் நிர்வாகம்(Samsung Company), தொழிலாளர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த மாதம் முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற கோரிக்கைகள் உட்பட அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, இது குறித்து பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், “சாம்சங் தொழிலாளர்கள் முன்வைத்த 14 கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளோம். முடிந்த அளவிற்கு பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று நாளையிலிருந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று அரசின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை தொழிலாளர்களும் பாதிக்கப்படக்கூடாது நிர்வாகமும் பாதிக்கப்படக்கூடாது”, என கூறினார்.
அனால், இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஒருதரப்பு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், சிஐடியு தொழிற்சங்க போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்டோரை வீடு புகுந்த காவல்துறை கைது செய்ததால் பரபரப்பு நிலவுகிறது.
What's Your Reaction?