இபிஎஸ் ஆட்சியில் இது இல்லவே, இல்லை- அடித்து பேசிய ஆ.ராசா 

எதிர்கால தலைமுறைக்கு என்ன வேண்டும் என்பதை பார்த்து, பார்த்து செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஆ.ராசா பேச்சு

Oct 9, 2024 - 16:50
இபிஎஸ் ஆட்சியில் இது இல்லவே, இல்லை- அடித்து பேசிய ஆ.ராசா 

எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சியில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை, முதலீடுகள் இல்லை என நீலகிரி திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூபாய் 32.90 லட்சத்தில் கட்டப்பட்டது புதிய கட்டிட திறப்பு விழா ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி திமுக எம்.பி., ஆ. ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டுக்காக புதிய இரண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். குறிப்பாக முதல்வரின் கிராமசாலை திட்டத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் பெள்ளைபாளையம் முதல் தென் பொன்முடி வரை புதிதாக போடப்பட்ட தார் சாலையை  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “ பெரிய தொழிற்சாலை தமிழகத்திற்கு வர வேண்டும் என்றாலும் படித்த இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலே புதிய தொழிற்சாலைகள் இல்லை. புதிய முதலீடுகள் இல்லை. ஆனால் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து பல லட்சம் கோடி முதலீட்டுகளை கொண்டு வந்து புதிய தொழிற்சாலைகளை துவக்கி வேலையில்லாத திண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறார்.

எதிர்கால தலைமுறைக்கு என்ன வேண்டும் என்பதை பார்த்து, பார்த்து செய்து வருவதால் தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களையும் ஆய்வு செய்து அவர்கள் எப்படிப்பட்ட பணிகளை அந்தந்த மாநிலத்திற்கு செய்கிறார்கள் என்பதற்கு மதிப்பெண் போட்டு இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் என்று அங்கீகாரம் வழங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow