பகீர் சம்பவம் : சுடுகாட்டில் பிணத்தின் உடையை திருடி விற்பனை செய்யும் கும்பல்
உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்திரும் பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை புதைப்பது அல்லது எரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆடைகளை, அவை புதியவை என்று மக்களை நம்ப வைப்பதற்காக உறைகளில் சுற்றி சந்தையில் விற்பனை செய்திருக்கும் பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சுடுகாட்டிற்கு இறந்தவர்கள் உடல்கள் வந்து சேரும்போது, அங்குள்ள ஊழியர்கள் இறுதிச் சடங்குகளுக்கு முன்பு உடல்களில் இருந்து ஆடைகளைக் எடுத்து ஒரு கும்பலிடம் கொடுத்து வந்துள்ளனர். அந்த கும்பல் அந்த ஆடைகளை நன்றாக துவைத்து, இஸ்திரி போட்டு, சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து இருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கிறார்கள்.
சால்வை- ரூ.20 முதல் ரூ. 40 வரை, குர்தா பைஜாமா- ரூ.45, சட்டை, பேண்ட் - ரூ.50, புடவை- ரூ. 70 முதல் ரூ.80 வரை என குறைந்தவிலைக்கு விற்பனை செய்து இருக்கின்றனர். இந்த கும்பலின் பகீர் செயல் வெளியே தெரிந்து இருப்பதால், உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
What's Your Reaction?