எம்ஜிஆர் மாளிகையில் வெடித்த பஞ்சாயத்து: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து 

அதிமுக உட்கட்சி மோதல் வெடிக்க தொடங்கி விட்டது. இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

எம்ஜிஆர் மாளிகையில் வெடித்த பஞ்சாயத்து: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தவெக ஆட்சி அமைய உள்ளது. 

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெறும் 21 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சியாகக் கூட அதிமுகவால் அமர முடியவில்லை. இதனால் எடப்பாடி தலைமை மீது அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக இன்று காலை கூட இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கூட்டம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow