சட்டமன்ற தேர்தல் தவெக முன்னிலை : உதயநிதி, துரைமுருகன், கே.என்.நேரு, பி.டி.ஆர்,. சீமான் பின்னடைவு
தபால் வாக்குகளில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளன.
ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்க வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று 62 மையங்களில் எண்ணப்படுகிறது. முதற்கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது. தவெக 65, திமுக 49 தொகுதிகளிலும், அதிமுக 42 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இருந்த போதிலும், திமுக மூத்த அமைச்சர்கள் மூவர் தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உதயநிதி, காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், திருச்சி மேற்கில் போட்டியிட்ட கே.என்.நேரு, மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பின்னட சந்தித்துள்ளனர்.
இதே போன்று காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடக்க முதலே பின்னடவை சந்தித்து வருகிறார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.
What's Your Reaction?