ரூ.100 கோடி மோசடி...அரசகுமார் வழக்கில் போலீஸ் தீவிர விசாரணை...
திமுக நிர்வாகி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று தருவதற்காக இதுவரை 59 தனியார் பள்ளிகளிடம் ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திமுகவின் நிர்வாகி அரசகுமார் தனியார் பள்ளி சங்கம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் அதன் மூலம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்துள்ளார்.
இந்த பணிக்காக தனியார் பள்ளிகளிடம் ஒரு தொகையை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுத்த பலருக்கு வேலையை செய்து கொடுக்காமல் மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டு எழுந்தது. தவெக ஆட்சி வந்தவுடன் அரசகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக 59 தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகத்தினர் புகார் அளிக்கத் தொடங்கினர். மோசடி தொடர்பாக பல கோடி மதிப்புள்ள 24 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கியுள்ளது. இதுவரை ரூ 7.34 கோடிக்கு மோசடி புகார் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஏமாற்றம் அடைந்த தனியார் பள்ளிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த லஞ்சப் பணம் எங்கெல்லாம் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளது மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?

