புதுச்சேரி : சிறுமி கொலை - கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சிறையில் பிற கைதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதால் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.

Mar 7, 2024 - 19:46
புதுச்சேரி : சிறுமி கொலை - கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து உடலை மூட்டையாக கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகே முழு உண்மை தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், கைதான 2 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இளவரசன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காலாப்பட்டு மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறையில் பிற கைதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow