கர்ப்பமாக்கியபின் காதலியை ஏற்க மறுத்த இளைஞர் கைது

தமிழரசனுக்கும் அவரது உறவுக்கார பெண்ணோடு திருமணம் செய்வதாக காதலியிடம் கூறியதாக தெரிகிறது.

Nov 24, 2023 - 12:20
Nov 24, 2023 - 15:37
கர்ப்பமாக்கியபின் காதலியை ஏற்க மறுத்த இளைஞர் கைது

கடலூர் அருகே இளம்பெண்ணை 7 மாதம் கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த குழந்தைக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் தமிழரசன்(29).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நெய்வேலி  பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.தற்போது அப்பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் தமிழரசன் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் மற்றும் பெற்றோருடன் பண்ருட்டி மகளிர் புகார் அளித்தார் அடிப்படையில் தமிழரசனை போலீசார் விசாரணை நடத்தியதில் காதலித்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசார் அடுத்த கட்ட விசாரணை ஈடுபடும்போது  தமிழரசனுக்கும் அவரது உறவுக்கார பெண்ணோடு திருமணம் செய்வதாக காதலியிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புகாரின் பேரில் தமிழரசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow