காஞ்சிபுரம்: கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்-பொதுமக்கள் கடும் அவதி

அதிகாரிகள் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nov 30, 2023 - 12:57
Nov 30, 2023 - 14:30
காஞ்சிபுரம்: கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்-பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரத்தில் கனமழையின் காரணமாக 2 அடிக்கு மேல் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமடையானது தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது.இந்த நிலையிலே காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது.மேலும் காஞ்சிபுரம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் இரவு வரை தொடர்ந்து மழையானது தீவிரமடைய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையானது கொட்டிதீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலே மழைநீர் ஆனது ஆங்காங்கே தேங்கி நின்று வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு அருந்ததிபாளையம் பகுதியில் மழை நீரானது அப்பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து சுமார் இரண்டு அடிக்கு மேல் முழுவதும் சூழ்ந்து இருக்கின்றது.

ஒரு சில வீடுகளிலே புகுந்து மழைநீரை அவர்களாகவே அப்புறப்படுத்தி வருகிறார்கள்.மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அதனுடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றமான வீசி சுகாதார சீர்கேடானது ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் பருவ மழை அல்லாத நாட்களிலும், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்குவது வாடிக்கையாகவே இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow