மீண்டும் தேர்தல் களம்... சீமான் கொடுத்த உறுதி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என மறைமுகமாக அறிவித்துள்ளார்.
நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக,அதிமுக, விஜயின் தவெக, உள்ளிட்ட கட்சிகளோடு நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வெல்லவில்லை. தவெக தான் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நாம் தமிழர் கட்சி மொத்தம் 4.02 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழக்கும் அளிவில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அதிமுகவின் எம்எல்ஏக்கள் தங்களில் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளன.
இதில் சீமான் போட்டியிடுவாரா என யூகங்கள் எழுந்து வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்துமாறு பேசியுள்ளார் சீமான்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத் தேர்தல் குறித்து பேசிய போது
"நான் ஒன்றும் மன்னன் இல்லை, மந்திரி மகன் இல்லை; கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கு. தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்.
பாரதிராஜா காரியத்திற்கு சென்றபோது பெரியவர் ஒருவர் என்னிடம் பேசினார்.
"மகனே, 50 உறுப்பினர்களோடாவது சட்டமன்றம் செல்வாய் என நினைத்தேன்; நடக்கவில்லை. விட்டுவிடாதே. இந்த இடைத்தேர்தலில் நின்று நீ உள்ளே போகவேண்டும்." என தெரிவித்தார். உறுதியாக போகிறேன் என சிரித்தவாறே சொன்னேன்.
மேலும் இடைத்தேர்தல் குறித்து தற்போது எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சீமான் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது துவண்டு போன நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அண்ணன் போட்டியிடுவது குறித்து பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத் தேர்தலில் போட்டியிட்டு சீமான் ஜெயிப்பாரா? அல்லது மீண்டும் தோல்வியை தழுவாரா ? என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
What's Your Reaction?





