விருச்சிகம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
விருச்சிகம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..
விருச்சிக ராசி பலன்கள்:
சனிபகவான், உங்க ராசிக்கு ஐந்தாம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானமுமான மினத்துல வக்ரம் அடைகிறார்ங்க. இந்த அமைப்பு, உங்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் கிட்டும் என்பதைக் காட்டுதுங்க பணியிடத்துல. சாதகமான சூழல் நிலவும்க படபடப்பும் பரபரப்பும் தவிர்த்தா, உங்க திறமைகள் வெளிப்பட்டு ஆதரவு அதிகரிக்கும்க, பிறர் குறையை பெரிதுபடுத்திப் பேசாம இருந்தா, சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிட்டும்க. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைக்கூடும்க மேன்மைகள் தொடரணும்னா, வீண்கர்வமும்.
வெட்டிப் பேச்சும் கூடவே கூடாதுங்க. வீட்டுல விசேஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர ஆரம்பிக்கும்க தடைப்பட்ட குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றினால் சுபகாரியங்கள் கைகூடும்க உங்க வாக்குல கடுமை இல்லாம கனிவு இருக்கறது அவசியம்க. எதிர்பாலருடன் எல்லைவகுத்துப் பழகறது நல்லதுங்க நிலம் வீடு மனை சம்பந்தமாக இருந்த வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும்க. குடும்பத்துடன் யாத்திரை, சுற்றுப் பயணம் செல்ல வாய்ப்பு வரும்க.
செய்யும் தொழில்ல நேரான வழியில செயல்பட்டா, சீரான லாபம் கிட்ட ஆரம்பிக்கும்க அரசுக்கு உரிய வரித் தொகைகளை செலுத்தறதுல தாமதம் கூடாதுங்க ரியல் எஸ்டேட் பங்குவர்த்தக முதலீடுகளை அனுபவம் இருந்தால் மட்டும் செய்யுங்க
அரசு, அரசியல் துறையினருக்கு மேலிடத்திடம் நற்பெயரும் அதனால் திடீர் பதவி பொறுப்புகளும் வரும்க இந்த சமயத்துல வாக்குறுதிகள் தருவதுவ நிதானம் முக்கியம்க கோப்புகள்ல கையெழுத்திடும் சமயத்துல கவனமா இருங்க.
பெண்கள் அமைதியான செயல்களால புத்துணர்ச்சியும் புதுப் பொலிவும் பெறக்கூடிய காலகட்டம். பொறுமையும், நிதானமும் இருந்தா. மணப்பேறும், மகப்பேறும் நிச்சயம் கிட்டும்க இளம்வயதினர் வாழ்க்கைத் துணையைதன்னிச்சையா தேர்வு செய்ய வேண்டாம்க. குடும்பத்துல உறவுகளால குதூகலம் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை பத்திரமா வைச்சுக்குங்க கனவாக இருந்த சொந்த வீடு, மனை இப்போ நனவாகும்க பத்திரங்கள்ல கவனமா இருங்க.
மாணவர்கள், திறமைக்கு உரிய நன்மைகளைப் பெறக்கூடிய காலகட்டம்க. ஆசிரியர் அறிவுரைகளை அலட்சியப்படுத்த வேண்டாம்க. கலை, படைப்புத் துறையினருக்கு, வார்த்தைகள்ல நிதானமும் செயல்கள்ல பணிவும் இருந்தா நிரந்தரமான இடம்பிடிக்கலாம்க
வேகமான பயணம் ஒருபோதும் வேண்டாம்க புதிய அறிமுகங்களிடம் எல்லைவகுத்துப் பழகுங்க பற்கள், எலும்பு, மூட்டு பாதம் உபாதைகள் வரலாம்க
செவ்வாய்க் கிழமைகள்ல முருகப் பெருமானை வணங்குங்க. முடிஞ்சா ஒருமுறை வைத்தீஸ்வரன்கோவில் சென்று முத்துக்குமார சுவாமியைக் கும்பிடுங்க. வாழ்க்கை செழிக்கும்.
What's Your Reaction?