“ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு வந்த சோதனை” டெபாசிட் பணத்தை திருப்பி கொடுங்க: மய்யம் நிர்வாகிகள் போர்க்கொடி

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனுதாக்கல் செய்த மய்யம் நிர்வாகிகளுக்கு டெபாசிட் பணத்தை திரும்ப தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். 

“ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு வந்த சோதனை” டெபாசிட் பணத்தை திருப்பி கொடுங்க: மய்யம் நிர்வாகிகள் போர்க்கொடி
டெபாசிட் பணத்தை திருப்பி கொடுங்க: மய்யம் நிர்வாகிகள் போர்க்கொடி

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் கடந்த ஜனவரி மாதம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் உள்பட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு உருவாக்கப்பட்டு, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது. 

அதில், ஒரு விருப்ப மனுவுக்கு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 60-க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்து இருந்தனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என காத்திருந்திருந்தனர். திமுகவிடம் மநீம கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி டார்ச்லைட் சின்னத்திற்கு பதிலாக 3 தொகுதிகளில் மநீம உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியது. 

இதனால்  திடீரென மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியில்லை என்றும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் மார்ச் 23 ஆம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனால், விருப்ப மனு அளித்தவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், கமல்ஹாசன் தேர்தலில் இருந்து விலகியதால், போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிர்வாகிகள், தங்களின் விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திருப்பித் தர வேண்டும் என மநீம-க்கு  எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow