"ஒரு வழியா வெளியான காங்., வேட்பாளர் லிஸ்ட்" கதர் சட்டைகாரர்கள் நிம்மதி பெருமூச்சு
நீண்ட இழுபறிக்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக கடந்த 30-ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்பட பலகட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் பட்டியல் மட்டும் வெளியாகாமல் தொடர்ந்து காலதாமதம் ஆகி வந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் 27 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நேற்றிரவு நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.இதை தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான 27 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தொகை மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், ஜி.கே.மணி மகனுமான ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு பென்னகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிட்டிங் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜ்குமார், ஆர்.கணேஷ் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 18 தொகுதிகளில் அதிமுக காங்கிரசு நேரடியாக மோத உள்ளன.
What's Your Reaction?

