அடடா...தவெக மாநாட்டுல இதெல்லாம் நடக்கப்போகுதா? விஜய்யின் அசத்தல் திட்டம்!

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மேடையேற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Oct 22, 2024 - 16:01
Oct 22, 2024 - 16:06
அடடா...தவெக மாநாட்டுல இதெல்லாம் நடக்கப்போகுதா? விஜய்யின் அசத்தல் திட்டம்!

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மேடையேற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் 127 ஏக்கர் நிலமும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அதேபோல திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு என பார்க்கிங் வசதிக்காக தலா 40 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதன் 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாக த.வெ.க தரப்பினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி 2 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாக மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் திருவிழாவாக இந்த மாநாடு நடைபெறும் என தலைவர் விஜய் ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது வரை மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்  ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்க செய்துள்ளது. 

இந்நிலையில் மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின்  தொண்டர்கள் முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மேடையேற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் கலைஞர்களை எந்த இடையூறும் இன்றி கவனித்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் ஜார்ஜ் கோட்டை மற்றும் தமிழ் பாரம்பரிய கட்டிடங்கள், இடங்களை பேசும் வகையில் செட் அமைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow