சட்டசபைக்கு முதலமைச்சர் குடிபோதையில் வருகிறார்: காங்கிரசு குற்றச்சாட்டால் பரபரப்பு

பஞ்சாப் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடுமையாக குற்றம் சாட்டினார். இதனால்  அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபைக்கு முதலமைச்சர் குடிபோதையில்  வருகிறார்: காங்கிரசு குற்றச்சாட்டால் பரபரப்பு
சட்டசபைக்கு குடிபோதையில் வந்த முதல்வர்

மே 1ம் தேதி நேற்று நடைப்பெற்றபஞ்சாப் சட்டமன்ற கூட்டத்தொடரில், அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்தார். உடனடியாக அவருக்கு மது சோதனை நடத்தவேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதாப் சிங் பாஜ்வா வலியுறுத்தி பேசினார்.

காங்கிரசின். இந்தபேச்சுக்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்த்து தெரிவித்தனர். இதனால் பஞ்சாப் சட்டமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இதற்கு முன்பாக பகவந்த் மான் எம்பியாக இருந்தபோது, இதே போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. பகவந்த் மான் சட்டமன்றத்தில் பேசியபோது வாய்குழறியதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர்.

எதிர்க்கட்சிகளின் மதுப் பரிசோதனை கோரிக்கையை சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஆம் ஆத்மி கட்சி (AAP) இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது. முதல்வர் உண்மையைப் பேசியதால் காங்கிரஸ் திகைப்படைந்து, அவதூறு பரப்புவதாக பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.

இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow