"அடங்கப்பா... இது உலகமகா நடிப்புடா சாமி"... விஜயை கலாய்த்த திமுக ஐடி விங்...

கரூர் கூட்ட நெரிசல்  சம்பவத்தின் போது நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தீர்கள் என்பது உலகத்துக்கே தெரியும் என விஜய் நடனமாடிய வீடியோவை எடுத்து போட்டு திமுக ஐடிவிங்க கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து திமுக ஐடி விங் தனது  எக்ஸ் தள பதிவில், ஆமா நீங்க சோகமா இருந்தது தான் உலகத்துக்கே தெரியுமே…

Jul 10, 2026 - 16:43
"அடங்கப்பா... இது உலகமகா நடிப்புடா சாமி"... விஜயை கலாய்த்த திமுக ஐடி விங்...

ஆடியோ லான்ச்,சீமந்தம் வீடு,பிறந்தநாள் கேக் கட்டிங்,புதுமனை புகுவிழா,கல்யாண வீடுன்னு இப்படி நீங்க சோக இருந்த காட்சியை தான் பாத்தோமே என திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தளபதி கச்சேரி பாடலுக்கு விஜய் நடனமாடிய வீடியோவை திமுக ஐடி விங் வெளியிட்டு கவுண்டமணி சத்யராஜ் காமெடியான "அடங்கப்பா இது உலகமகா நடிப்புடா  சாமி " என்ற புகைப்படத்தையும் போட்டு  விமர்சித்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

இன்று நடைபெற்ற  கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விளக்கினார். அவர் பேசுகையில் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினேன். நாமக்கல்லில் கூட்டம் முடித்துக் கொண்டு கரூருக்கு சென்ற போது அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் செய்திருக்கலாமே? "இங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. கன்ட்ரோல் செய்ய முடியவில்லை, வராதீர்கள்" என சொல்லியிருக்கலாமே.

போலீஸ் நினைத்தால் எந்த ஒரு கூட்டத்தையும் ரத்து செய்யலாமே! அதையெல்லாம் செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு போலீஸே எங்களை உள்ளே கூட்டிட்டு வந்து விட்ட நாடகம் இருக்கு பாருங்க! நம்பிவிட்டேன், அன்று இருந்த கரூர் போலீஸை முழுசா நம்பிட்டேன்.

கரூரில் பேசிய போது "எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல் துறைக்கு நன்றி" என்றெல்லாம் சொன்னேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எனக்கு தெரியாது. இதுக்கெல்லாம் யார் காரணம்? இதை யார் சொல்லி செய்தது? இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க, ஒரு வேளை அப்படி நடந்தால் இப்படி பண்ணுங்க, இப்படி உத்தரவுகளை பிறப்பித்து அழுத்தம் கொடுத்தது யார்? என் மீது பழியை தூக்கி போடுறாங்க.

இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே! இது ஏன் எதனால் நடந்தது, அதன் பின்னணி என்ன என அந்த வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? என விஜய் கரூர் சம்பவம் குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். இதனை தற்போது விஜயின் பேச்சுக்கு பதலடி கொடுக்கும் வகையில் திமுக ஐடி விங் முதலமைச்சர் விஜய் ஆடிய இந்த வீடியோவை வெளியிட்டு தற்போது அது வைரலாகி வருகின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow