கோவில்பட்டியில் குண்டு வீச்சு.. நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்.. பதைபதைக்கும் சிசிடிவி..
ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே ரேஷன் கடத்தல் குறித்து தட்டிக்கேட்ட வழக்கறிஞரின் வீட்டின் மீதும், வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.
ராஜு நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வத்திற்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று ரேஷன் அரிசி வாங்கிவரச்சொல்லி கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கறிஞர் மாரிச்செல்வம் அந்த கும்பலை தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனிடையே விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை போலீசார் மடக்கிப்பிடித்துள்ளனர். இதற்கு வழக்கறிஞர்தான் காரணம் என்று நினைத்து நேற்று நள்ளிரவு 5 இருசக்கரவாகனங்களில் 14 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞரின் வீட்டிற்கு சென்றுள்ளது.
அங்கு அக்கும்பல் கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வழக்கறிஞரின் வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பியோடியுள்ளது.
இதனிடையே ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் வழக்கறிஞருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக சரக்கு வாகனத்தையும் அக்கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. ரேஷன் கடத்தல் கும்பலின் இந்த வெறிச்செயலால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?