கடலூர்: கனமழையால் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம்- விவசாயிகள் கவலை

வாய்க்கால்களை முறையாக தூர்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்

Nov 30, 2023 - 12:09
Nov 30, 2023 - 14:34
கடலூர்: கனமழையால் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம்- விவசாயிகள் கவலை

கடலூரில் கனமழை பெய்து வருவதால் புவனகிரி அருகே  400 ஏக்கருக்கு மேல் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த நிலையில் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம், பு.சித்தேரி, மேல மணக்குடி, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சுமார் 400 ஏக்கருக்கு மேல் பயிர் முழுவதும் சேதமானது.புவனகிரி பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு இரவு முழுதும் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

முரட்டு வாய்க்கால் எனப்படும் பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் வழியாக வயலில் இருக்கும் நீர் மழை காலங்களில் வடிவது வழக்கம்.இந்த வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர்வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.இதனால் புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்கு திட்டை, வடக்கு திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். மேலும் வாய்க்கால்களை முறையாக தூர்வாரி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow