தஞ்சை: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வராத மருத்துவர்கள்!

செவிலியர்களே மாத்திரைகள் கொடுத்து அனுப்பி விடுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

Nov 20, 2023 - 17:23
Nov 20, 2023 - 19:01
தஞ்சை: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வராத மருத்துவர்கள்!

சாலியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் பல மணிநேரம் காத்திற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செவிலியர்களே மருத்துவம் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம்,சாவியமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சூரியக்கோட்டை, திருபுவனம், சாலியமங்கலம், களஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் உள்பட மக்கள் சிகிச்சைக்காக சாலியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் ஒரு ஆண் மருத்துவர், இரண்டு பெண் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.மருத்துவர் பெரும்பாலான நாட்களில் பணிக்கு  வருவதே இல்லை எனவும், பணிக்கு வரும் நாட்களில் கூட காலதாமதமாக வருகிறார் என அப்பகுதி மக்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது மழை காலம் என்பதால் கைக்குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மருத்துவர் உரிய நேரத்திற்கு வராததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.செவிலியர்களே மாத்திரைகள் கொடுத்து அனுப்பி விடுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், பெண் மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow