தமிழகத்துக்கு வருகிறாரா பிரதமர் மோடி..? எதற்கு தெரியுமா?
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள வான்வழி விமான சாகசத்தை பார்வையிட அக்டோபர் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
                                சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள வான்வழி விமான சாகசத்தை பார்வையிட அக்டோபர் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1932 ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நிறுவப்பட்ட இந்திய விமானப்படை, வருடந்தோறும் அக்டோபர் 8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்திய விமானப்படை 92-வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி செப்டம்பர் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி விமான சாகம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழு உட்பட 72 வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை காண அனைவரையும் வரவேற்று defence PRO எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மீண்டும் விமான சாகச நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளது.
தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்படும் விமானங்கள், கோவளத்திலிருந்து சென்னை மெரினாவரை கடற்கரையை அலங்கரித்தவாறு பறக்க உள்ளது என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 6ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதிவரை விமான சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற உள்ளது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            