அரசு பஸ் டிரைவர்,கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு!

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தரக்கோடி  ப்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Nov 17, 2023 - 12:47
Nov 17, 2023 - 13:14
அரசு பஸ் டிரைவர்,கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லையில் அரசு பேருந்தை மறித்து ஏறிய இளைஞர்களை தட்டிக்கேட்ட  அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம், பாபநாசம்-திருநெல்வேலிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிந்தது. பஸ் டிரைவராக ரெஜியும், கண்டக்டராக கண்ணனும் இருந்தனர்.பஸ் கல்லிடை குறிச்சி ஸ்டாப்பில் கொஞ்ச நேரம் நின்று பயணிகளை ஏற்றி விட்டு புறப்பட்டது.சுமார் அரை கி.மீட்டர் தூரம்தான் பஸ் சென்றிருக்கும், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பஸ்ஸை துரத்திக்கொண்டு வந்து ரோட்டின் குறுக்கே வண்டியை விட்டு மறித்தனர்.இதனால் கடுப்பான டிரைவர் ரெஜி பஸ்ஸை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு பேர் இறங்கி ஓடி வந்து பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

ஒருவர் மட்டும் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்று விட்டார். அந்த இளைஞர்களிடம் டிரைவர் ரெஜி, என்னய்யா பஸ் ஸ்டாப்பில் வந்து ஏறக்கூடாதா? நடுவழியில் பஸ்ஸை மறிப்பதா என்று சத்தம் போட்டிருக்கிறார். இதனால் டென்சனான இருவரும் பைக்கில் வந்தவனுக்கு போனைப்போட்டு நடந்ததை கூறியுள்ளனர். அதற்குள் பஸ் வீரவநல்லூர் ஸ்டாப்பில் நின்றிருக்கிறது. அப்போது அங்கு வந்த இருவரது நண்பர் கையில் அரிவாளுடன் பஸ்ஸில் ஏறி, டிரைவர் ரெஜியின் தலை, முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதை தடுக்க வந்த கண்டக்டர் கண்ணனையும் வெட்டியிருக்கிறார். அதன் பின்னர் அவர் பஸ்ஸை விட்டு இறங்கி தப்பி ஓடியிருக்கிறார்கள். பஸ்சில் இருந்த இரு இளைஞர்களும் ஓடிவிட்டனர். இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு வந்து டிரைவர் ரெஜியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து விட்டு அரிவாளால் வெட்டியது யார் என்கிற விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமையா  கூறுகையில், “அரிவாளால் வெட்டியவர் பற்றிய துப்பு கிடைத்திருக்கிறது.விரைவில் கைது செய்வோம்” என்றார். டிரைவர் ரெஜி அரிவாளால் வெட்டப்பட்டதை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு தரக்கோடி  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இது தொடர்பாக தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow