உலக மீனவர் தின நிகழ்ச்சி - கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்பு

மீனவர்களின் கோரிக்கையை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்.

Nov 21, 2023 - 15:23
Nov 21, 2023 - 16:17
உலக மீனவர் தின நிகழ்ச்சி - கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்பு

மீனவர்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி இல்லை என்று தூத்துக்குடியில் நடந்த உலக மீனவர் தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தமிழக பாரம்பரிய மீனவர்கள் சார்பில் தூத்துக்குடியில் மீனவர் தின நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் இருந்து 40 மீனவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "மீனவர்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி இல்லை.அதேபோல ராணுவத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவை காக்கும் காவல்துறையாக மீனவர்கள் செயல்படுகிறார்கள்.கடல் வழியாக வரும் அச்சுறுத்தலை அவர்களே காத்து நிற்கிறார்கள்.

இயற்கையிலேயே மீனவர்கள் திறமை படைத்தவர்கள்.நான் ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டியில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.அப்போது அங்குள்ள மீனவ சமுதாய இளைஞர்கள் சிறப்பாக யோகா பயிற்சிகளை செய்து அசத்தினார்கள்.அவர்களது திறமையால் பல்வேறு துறைகளில் மீனவர்கள் சாதித்து வருகிறார்கள்.

மீனவர்கள் தங்கள் திறமையை பயன்படுத்தி ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிளுக்கு வர முயற்சிக்க வேண்டும்.இந்திய கடலோர பாதுகாப்பு படை சேருவதற்கு அவர்கள் முன் வர வேண்டும்.கடலோர பாதுகாப்பு படையில் மீனவர்களை சேர்க்க இந்திய அரசாங்கம் முயற்சி செய்யும்.நான் பல மாநிலங்களில் பார்த்திருக்கிறேன்.கடலோர பாதுகாப்பு படையில் இருக்கும் வீரர்களுக்கு நீச்சல் தெரிவதில்லை. மக்களை கப்பல் மற்றும் படகுகளில் அழைத்து செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அந்த வீரர்களால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.எனவே இயற்கையிலேயே நீச்சல் தெரிந்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படை சேர வேண்டும். 

அதேபோல ஆழ்கடல் மீன்பிடித்துறையிலும் மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தற்போது 44 மீட்டர் மீன்பிடி படகுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்று இங்கே சொல்லப்பட்டது. அவர்களது குறை நிவர்த்தி செய்யப்படும்.ஆழ்கடல் மீன்பிடி மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.

மீனவர்களின் கோரிக்கையை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்.அவர்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுக்கு எடுத்து தெரிவிக்கப்பட்டு நிச்சயமாக நிவர்த்தி செய்யப்படும்.எப்போதாவது நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசும் வாய்ப்பு பெற்றால், அவர் மீனவர்கள் குறித்து  பேச தயங்கியதே இல்லை.அந்த அளவுக்கு அவர் மீனவர் மீது தனி கவனம் செலுத்துகிறார்" என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மீண்டும் சமுதாய சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து அருகில் உள்ள பணிமய மாதா ஆலயததிற்கு சென்று தரிசனம் செய்தார்.ஆலய பாதிரியார்கள் கவர்னருக்கு மாதா படத்தை வழங்கி ஆசிர்வாதம் செய்தார்கள்.அதைத் தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கவர்னர் பெற்றுக்கொண்டார்.

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow