மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்குதண்டனை : நெல்லை நீதிமன்றம் அதிரடி
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, தூக்கு தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 14 வயது சிறுமிக்கு, அவரது தந்தை தொடர்ந்து பாலியல் வன்மை கொடுமையில் ஈடுபட்டு வந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அந்த மாணவி, தந்தை செய்யும் வன்கொடுமை தொடர்பாக அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். சிறுமி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் அவரது தந்தையை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டார். இதில் நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கு முழுவதும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவரது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை நாங்குநேரி பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர்.
What's Your Reaction?

