பிறந்தநாள் கொண்டாட்டம் என ஏமாற்றி இளம்பெண்ணை அழைத்து சென்ற இளைஞர்-கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த சாஜன் அவரது கூட்டாளி ஐபின்ஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்

Nov 30, 2023 - 12:26
Nov 30, 2023 - 14:34
பிறந்தநாள் கொண்டாட்டம் என ஏமாற்றி இளம்பெண்ணை அழைத்து சென்ற இளைஞர்-கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

குமரி அருகே கல்லூரியில் உடன் பயிலும் மாணவியை உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி ஏமாற்றி கடற்கரைக்கு கூட்டி சென்ற இளைஞர்களை கட்டி வைத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் , கொல்லங்கோடு அடுத்துள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.இவருடன் படித்து வந்த சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சரத்ப்ரியன் மற்றும் தூத்தூர் பகுதியை சேர்ந்த மேக்ஸ்லின் என்ற மாணவர்கள் அந்த மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் விடுமுறை நாளில் மாலை வேளையில் மாணவியின் வீட்டிற்கு சென்ற சரத்ப்ரியன் தனது தாயாருக்கு பிறந்தநாள் என்று அதனை அருகில் உள்ள பொழியூர் கடற்கரை பகுதியில் குடும்பமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கு தானும் வரும்படி கூறி அழைத்துள்ளார்.அதற்கு அவரது வீட்டில் உள்ளவர்களும் நண்பர்தானே என்று எண்ணி அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

சிறிது தூரம் சென்ற உடன் அவர்களுடன் மேக்ஸிலினும் இணைந்துள்ளார். மூன்று பேருமாக பொழியூர் கடற்கரைக்கு சென்ற போது அங்கு சரத்ப்ரியனின் தாயோரோ, சகோதரியோ இல்லாததை கண்டு பயமடைந்த மாணவி தன்னை வீட்டிற்கு கொண்டு விடும்படி கேட்டுள்ளார்.அப்போது இரண்டு இளைஞர்களும் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து அங்கிருந்து மது அருந்தி உள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை வீட்டிற்கு கொண்டு விட்டபின் குடியுங்கள் என்று கூறி உள்ளனர்.இதற்கிடையே போதை தலைக்கேறியதால் மாணவர்கள் இருவரும் அந்த மாணவியின் மடியில் படுத்துக்கொண்டு சில்மிஷ சீண்டலில் ஈடுபட துவங்கி உள்ளனர்.இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே மாணவியிடம் அத்துமீறலில் இறங்கி உள்ளனர்.இதனை அந்த பகுதியில் பார்த்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் அங்கு வந்து மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களையும் ஆடைகளை களைந்து கட்டி வைத்து தாக்கிவிட்டு மாணவியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சத்தம் போட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து கடலில் தூக்கி வீசி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மாணவியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர்.தொடர்ந்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியே இதுகுறித்து கூறினால், வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் கூறி மிரட்டி அந்த மாணவியின் நம்பரையும் வாங்கி கொண்டு விரட்டி விட்டுள்ளனர். 

இதனையடுத்து, வீட்டிற்கு வந்த மாணவி இது குறித்து யாரிடம் கூறுவது என்பது தெரியாமல், பரிதவித்து நிற்க பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு தங்களது ஆசைக்கு இணங்க கூறி வற்புறுத்தி வந்துள்ளனர்.இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாணவியை பலாத்காரம் செய்தபோது எடுத்து வைத்திருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.

இதைதெரிந்து கொண்ட மாணவி யாரிடம் கூறுவது என்ன செய்வது என்பது தெரியாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்திருந்த நபரும் திருமணம் வேண்டாம் என்று கூறி சென்றுள்ளார்.இதனையடுத்து மாணவி தன்னை போல் இனிமேல் வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற கொடுஞ்செயல் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னை இந்த கொடுஞ்செயலுக்கு ஆளாக்கிய நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொழியூர் போலீசிலும், குளச்சல் மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கேரள போலீசார் மாணவியிடம் நேரடியாக  வந்து வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த சாஜன் அவரது கூட்டாளி ஐபின்ஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கொடுஞ்செயலுக்கு காரணமாக இருந்த இரண்டு மாணவர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், இதேபோன்று பல அசம்பாவித சம்பவங்கள் கல்லூரியில் நடந்து வரும் நிலையில் அவற்றையெல்லாம் கல்லூரி நிர்வாகம் மூடி மறைத்து வருவதாகவும் குற்றசாட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow