வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்

மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Nov 28, 2023 - 12:19
Nov 28, 2023 - 13:44
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்

அதிராம்பட்டினம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோடு தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள சதாம் நகரை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி.கூலி தொழிலாளி.இவருடைய மனைவி தஸ்லிமா.இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரண்டு குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்ற நிலையில், மூன்று வயதான ஆதிஸ் என்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.சிறுவனின் தாயார் தஸ்லிமா சமைத்துக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென தெருவில் சுற்றித்திரிந்த 3 நாய்கள்  வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஆதிஸ் மீது பாய்ந்து கடித்து குதறின. இதைக்கண்டு சிறுவனின் தாய் கத்தி கூச்சலிட்டனர்.

வலி தாங்க முடியாமல் சிறுவன் அழுது துடித்தான்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர். வலியால் துடித்த  சிறுவனை  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் தூங்கிகொண்டிருந்த சிறுவனை  நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த பகுதியில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow